குடியுரிமை மசோதாவை ஆதரித்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஒரு யு-டர்ன் எடுத்து தன் நிலைப்பாட்டை மாற்றுகிறது!

ஹைதராபாத்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்து மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பத்து நாட்களுக்குப் பிறகு, ஆந்திராவின் துணை முதல்வர் அம்சத் பாஷா ஷேக் பெபாரி, தேசிய குடிமக்களின் பதிவு (NRC) உட்பட எந்தவொரு ‘முஸ்லிம் எதிர்ப்பு’ மசோதாவையும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி ஆதரிக்காது என்று கூறினார்.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தனக்கு உறுதியளித்ததாக மேற்கோள் காட்டி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் தன்மை கொண்டது  என்றும் அவர்களின் நலன்களைப் பாதுகாக்க அனைவரும் முன்னிற்பார்கள் என்றும் பாஷா முஸ்லிம்களுக்கு உறுதியளித்தார்.

அமைச்சரவையில் சிறுபான்மையினரின் நலத்துறையை வைத்திருக்கும் பாஷா, பொதுவாக நாடு முழுவதும் , குறிப்பாக ஆந்திரப் பிரதேசத்திலுள்ள உள்ள முஸ்லிம்களிடையே CAA மற்றும் NRC யினால் உண்டாகியிருக்கிற கவலை குறித்து பதிலளிக்கும் விதமாக பேசினார்.

பரம எதிரிகளான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இந்த மசோதாவை ஆதரித்தன என்று குறிப்பிடலாம். மக்களவையில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி 22 உறுப்பினர்களையும், த.தே.கூ 3 பேரையும் கொண்டுள்ளது.

சிவசேனாவுக்குப் பிறகு, பாராளுமன்றத்தில் அவர்களின் சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒரு முரண்பாடான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்த இரண்டாவது கட்சி ஒய்.எஸ்.ஆர்.சி.பி. ஆகும்