டில்லி:

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சபாநாயகரிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று தீர்மானம் கொண்டுவரப்படும் என எதிர்பார்த்த நிலையில், அமளி காரணமாக நம்பிக்கை யில்லா தீர்மானத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது என்று அறிவித்த மத்திய அரசுக்கு எதிராக  ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் நேற்று அளித்தது. அதைத்தொடர்ந்து பாஜகவுடனான உறவை துண்டித்துக்கொள்வதாக அறிவித்துள்ள தெலுங்குதேசமும், மோடி அரசுக்கு எதிராக நோட்டீஸ் அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் குறித்து சபாநாயகர் அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில்,

நோட்டீசுக்கு ஆதரவாக உள்ள எம்.பி.க்களை எண்ண முடியவில்லை என்றும், அமளி ஏற்பட்டதால் அவை முறையாக நடைபெறவில்லை என்று காரணம் காட்டி  நோட்டீசை எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை மீண்டும் சபை கூட உள்ள நிலையில், அன்று தெலுங்குதேசம் கட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது