விஜய் சேதுபதி – அஞ்சலி நடிக்கும் படத்தை தயாரிக்கும் யுவன் சங்கர் ராஜா

சென்னை

விஜய் சேதுபதி – அஞ்சலி ஜோடியாக நடிக்கும் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார்.

பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் கே புரோடக்‌ஷன்ஸ் என்னும் நிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தாயாரிக்கின்றன.     இதில் விஜய் சேதுபதி கதாநாயாகனாக நடிக்கிறார்.    இயக்குனராக அருண்குமார் பொறுப்பேற்றுள்ளார்.

அருண்குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘பண்ணையாரும் பத்மினியும்’ ,  ’சேதுபதி’ ஆகிய படங்களில் இயக்குனராக பணி புரிந்தவர் ஆவார்.  இந்தப் படத்தில் இறைவி படத்துக்குப் பின் மீண்டும் அஞ்சலியுடன் விஜய் சேதுபதி இணைகிறார்.    இந்தப் படம் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிறது.

நேற்று நடைபெற்ற இந்தப் படத்தின் தொடக்க விழாவில்  விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.    விரைவில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தென்காசியிலும்,  மலேசியாவிலும் நடைபெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன,