விஜய் படத்துக்கு இசைஅமைக்க எப்போதும் தயார்.. யுவன் சங்கர் ராஜா சொல்கிறார்..

சை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அஜீத் குமார் நடித்த தீனா, பில்லா, பில்லா2, ஏகன், மங்காத்தா, ஆரம்பம், நேர் கொண்ட பார்வை போன்ற படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். தற்போது வலிமை’படத்திற்கும் இசை அமைக்கிறார். ஆனால் விஜய்யின் புதிய கீதை படத்திற்கு மட்டுமே இசை அமைத்தார். இப்படத்தில் 6 பாடல் களுக்கு யுவன் இசை அமைக்க பின்னணி இசையை கார்த்திக் ராஜா அமைத்தார். இப்படத்தை கே.பி.ஜெகன் இயக்கி இருந்தார்.

 

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா ரசிகர் களுடன் பேசினார். அப்போது ஒரு ரசிகர், ‘விஜய் படத்துக்கு எப்போது மீண்டும் இசை அமைக்கப் போகிறீர்கள் என்று கேட்க அதற்கு பதில் அளித்தார் யுவன்.
அவர் கூறும்போது.’என்னை மிகவும் கவர்ந்தவர் விஜய். அவர் படத்துக்கு இசை அமைக்க எப்போதும் ரெடியாக இருக்கிறேன்’ என்றார்.