’நான் தமிழ் பேசும் இந்தியன்’ யுவன் சங்கர் ராஜா..

பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும், நடிகர் மெட்ரோ சிரிஷும் டிஷர்ட் அணிந்து நின்று பேசிக் கொண்டி ருக்கிறார்கள். அந்த படம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. டிஷர்ட் சூப்பராக இருப்பதற்காக இப்படி வைரலாகவில்லை. அந்த டிஷர்ட்டில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்தான் வைரலுக்கு காரணம்.


யுவன் அணிந்திருக்கும் டிஷர்ட்டில், “i am a தமிழ் பேசும் Indian” என்றும், நடிகர் மெட்ரோ சிரிஷ் அணிந்திருக்கும் டிஷர்ட்டில் “Hindi Theriyathu Poda!!!(ஹிந்தி தெரியாது போடா) என்றும் எழுதப் பட்டிருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக இந்த வாசகங்கள் இருப்பதால்தான் இப்படம் வைரலாகி வருகிறது.
யுவன் சங்கராஜவின் இந்த டிவிட்டை திமுக எம்பி கனிமொழி Interesting எனக் குறிப்பிட்டு, தம்ஸ் அப் குறியுடன் ரீடிவீட் செய்துள்ளார்.