சச்சினைப் பற்றி நெகிழ்ந்த யுவ்ராஜ் சிங் – எதற்காக தெரியுமா?

சண்டிகர்: சச்சினை முதன்முறையாக சந்தித்தபோது, கடவுளுடன் கைக்குலுக்கியதைப் போன்ற உணர்வு ஏற்பட்டதாக பூரித்துள்ளார் யுவ்ராஜ் சிங்.

கடந்தாண்டு ஜுன் 10ம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் யுவ்ராஜ் சிங். அந்த அறிவிப்பின் ஓராண்டு நிறைவையொட்டி, யுவ்ராஜ் சிங்குடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

இதைப் பார்த்து பரவசமடைந்த யுவ்ராஜ் சிங், சச்சினுக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் கூறியுள்ளதாவது, “நன்றி மாஸ்ர்! உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, கடவுளுடன் கைகுலுக்கிய உணர்வு ஏற்பட்டது.

எனது திறமைமீது நம்பிக்கை வைக்க கற்றுக்கொடுத்ததோடு, என்னை மிகவும் கடினமான காலக்கட்டங்களில் வழிநடத்தினீர்கள். உங்கள் வழியைப் பின்பற்றி, நானும் இளம் வீரர்களுக்கு முன்மாதிரியாய் இருந்தேன். உங்களுடனான அற்புத நினைவுகள் பலவற்றை இன்னும் எதிர்பார்க்கிறேன்” என்றுள்ளார் அவர்.