சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறும் யுவராஜ் சிங்

புதுடெல்லி:

இந்திய அணியில் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது.


இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, முதல் தர கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கு யுவராஜ் சிங் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேசி முடிவு செய்யவுள்ளார். வெளிநாடுகளில் நடக்கும் ஜிடி20 போட்டிகளில் விளையாட அவர் ஆர்வம் காட்டுகிறார்.

கனடாவில் நடக்கும் ஜிடி20 போட்டி,அயர்லாந்து, ஹாலந்து, கரீபியன் ஆகிய நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பமாக இருப்பதால் எங்களிடம் அனுமதி கோருகிறார்.

மிகச் சிறந்த வீரரான யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார். ஆனால் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடைசியாக இந்திய அணியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக யுவராஜ் சிங் பங்கேற்றார். அதன்பின் அவர் ஓரங்கட்டப்பட்டார்.