கிரிக்கெட் – மீண்டும் களம் காணும் யுவ்ராஜ் சிங்!

புதுடெல்லி: தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மீண்டும் களமிறங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் யுவ்ராஜ் சிங் என்று தகவல்கள் கூறுகின்றன.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங், கடந்த 2019ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். அதேசமயம், இவரை மீண்டும் விளையாட வருமாறு கோரிக்கை விடுத்தது பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்.

இதனையடுத்து, இந்த கோரிக்கையை ஏற்று, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக, பிசிசிஐ அமைப்பிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

“பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திடமிருந்து வந்த கோரிக்கை தொடர்பாக, துவக்கத்தில் குழப்பமாக இருந்தது. ஏனெனில், உள்ளூர் போட்டிகளில் நிறைய சாதித்துவிட்டதால், உலகளாவிய லீக் தொடர்களில் பங்கேற்க விரும்பினேன்.

அதேசமயம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை புறந்தள்ளவும் விரும்பவில்லை. பிசிசிஐ அனுமதிக்கும் பட்சத்தில், ஐபிஎல் தொடரில் மட்டும் பஞ்சாப் அணிக்காக களமிறங்கி ஆடுவேன்” என்றுள்ளர் யுவ்ராஜ் சிங்.