யாரும் முன்வராததால் அடிப்படை விலைக்கே ஏலம் போன யுவராஜ் சிங்!

2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் ஏலத்தின் முதல் சுற்றில் விலைப்போகாத யுவராஜ் சிங் 2வது சுற்றில் அடிப்படை விலைக்கே மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துள்ளது.

yuvi171218_0

2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட் மற்றும் தமிழகத்தை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

ஆனால் ஸ்டெயின், மெக்கல்லம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏலம் போகாதது அதிர்ச்சி அளித்துள்ளது. அவர்களை தவிர்த்து, இந்திய வீரர் யுவராஜ் சிங் அடிப்படை விலையான ரூ. ஒரு கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். முதல் சுற்றில் அவரை எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை.

அதன்பிறகு விலைப்போகாத விரர்களின் ஏலம் 2வது சுற்றில் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அடிப்படை விலைக்கே யுவராஜ் சிங் விலைப்போனார். இது அவரது ரசிகர்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேப்போல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்தில் தனது அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கே சன்ரைசஸ் ஐந்தரபாத் அணி சார்பாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.