Random image

பாக்கிஸ்தான் வீரருக்கு ஷூ லேஸ் கட்டிவிட்ட இந்திய வீரர் – ’ சகால் ’ க்கு சல்யூட் செலுத்தும் ரசிகர்கள்

இந்திய வீரர் சகால் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் பாக்கிஸ்தான் வீரர் உஸ்மான் கானுக்கு ஷூ லேஸ் கட்டி விட்டதற்கு இரு நாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பாரட்டி வருகின்றனர்.

sahal

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் தொடரில் தோல்வியை தழுவிய இலங்கை மற்றும் ஹாங் காங் அணிகள் வெளியேற, மற்ற அணிகள் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்றன.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஓராண்டுக்கு பிறகு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்யாசத்தில் பாக்கிஸ்தானை வீழ்த்தி கடந்த ஆண்டு தோல்விக்கு பழித்தீர்த்துக் கொண்டது.

sahal-greetings

இந்நிலையில் போட்டியின் போது இந்திய வீரர் சகால், பேட்டிங் செய்த பாக்கிஸ்தன் வீரர் உஸ்மான் கானுக்கு ஷூ லேஸ் கட்டிவிட்டர். சகாலின் இந்த செயலை ரசிகர்கள் சமூக வளைதளங்களில் பரப்பி வருவதுடன், பாரட்டுகளையும் தெரிவித்தனர். ஒருபடி மேலே சென்று இரு நாட்டு ரசிகர்களும் சகாலுக்கு சல்யூட் செலுத்தி வருகின்றனர்.