ரஞ்சன் கோகோய்க்கு திடீரென அறிவிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு..!
புதுடெல்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், தற்போதைய ராஜ்ய சபா உறுப்பினருமான ரஞ்சன் கோகோய்க்கு, இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது 66 வயதாகும் ரஞ்சன் கோகோய், பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இவர் தலைமையிலான அமர்வு, அவசர அவசரமாக அளித்த அயோத்தியா தீர்ப்பு சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
இவர், பாஜக சார்பில் அஸ்ஸாம் மாநில முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பு ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படுமா? என்பது தெரியவில்லை.
தற்போது, விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ரஞ்சன் கோகாய்க்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை ( சிஆர்பிஎஃப்) பிரிவின் ஆயுதம் தாங்கிய கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்படும்.
இவருக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.