ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்ப மாட்டோம்: மலேசிய பிரதமர் பிடிவாதம்
கோலாலம்பூர்:
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற முடியாது என்று மலேசிய பிரதமர் தெரிவித்து உள்ளார்.
வங்கதேசம் மற்றும் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்ததாகவும், மததுவே ஷம் பரப்பி வந்த தாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஸ்லாமிய மத போதகரான ஜாகிக் நாயக் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அவரை கைது செய்ய இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஜாகிர் நாயக் மலேசியாவில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவரை அங்கிருந்து வெளியேற்றும்படி இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை மலேசிய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது குற்றச்சாட்ட பதிவு செய்துள்ள நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், தற்போது மலேசியா நாட்டில் தலைமறைவாக உள்ள ஜாகிர் நாயக், தன் மீதான வழக்குகளை தள்ளுபடி வேண்டும் என்றும், தனது பாஸ்போர்ட்டை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், ஜாகிர் நாயக் நீதி மன்றத்திலோ, விசாரணை ஆணையத்திலோ நேரில் ஆஜராகமல் இதுகறித்து முடிவு எடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில், இந்தியா – மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி தேடப்படும் குற்றவாளியான , ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.
இதற்கு பதில் அளித்துள்ள மலேசிய பிரதமர், இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். இன்று கோலாலம்பூர் அருகே புட்ரஜெயா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமல்ர மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என கூறினார்.