வித்தியாசமான வேடத்தில் ஷாருக்கான்நடிக்கும் ஜீரோ பட டீசர் வெளியீடு

மும்பை
ஷாருக் கான் நடிக்கும் ஜீரோ பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் இயக்குனரான ஆனந்த் எல் ராய் பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய தனு வெட்ஸ் மனு உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பிரபலம் அடைந்துள்ளன

தற்போது ஆனந்த் எல் ராய் ஜீரோ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக் கான், காத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் டிசம்பர் அன்று வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.

ஜீரோ படத்தில் ஷாருக் கான் 3 அடி உயரம் உள்ளவராக நடித்து வருகிரார். இந்த வித்யாசமான வேடத்தின் அவர் நடிப்பதால் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே தமிழ்ப்படமான அபூர்வ சகோதரர்கள் என்னும் படத்தில் கமலஹாசன் குள்ளமான தோற்றத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.