மலேசியாவிலும் ஸிகா வைரஸ்! முதல் நோயாளி இனம் காணப்பட்டார் !

கோலாலம்பூர்:

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஸிகா வைரஸ், மலேசியாவிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

download (4)

பிறக்கின்ற குழந்தைகளின் மூளை வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் ஸிகா வைரஸ் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.  ஏற்கெனவே சிங்கப்பூரில் 115 பேர் இந்த வைரஸால் தாக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில்  தற்போது மலேசியாவில் ஒருவருக்கு ஸிகா வைரஸ் தாக்கியிருக்கிறது.

download (2)

மலேசியாவின் வட மாநிலத்தில் உள்ள சபா நகரில் வசிக்கும் 61 வயது நபருக்கு இந்த ஸிகா வைரஸ் பாதித்துள்ளது.  கொசுவால் அவருக்கு இந்த வைரஸ் அவருக்கு பரவியிருக்கிறது. அவருக்கு உடனடியாக தகுந்த சிகிச்சை அளிக்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தகவலை மலேசியா சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது