Random image

ஜிம்பாப்வே 20:20 கிரிக்கெட்: ஆரன் பின்ச் சாதனையுடன் ஆஸ்திரேலியா வெற்றி

ஹராரே:

சர்வதேச டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே நாட்டில் நடக்கிறது. இன்று நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 229 ரன்களை குவித்தது. ஆரான் பின்ச் 76 பந்துகளில் 172 ரன் எடுத்தார். இதில் 16 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் அடங்கும். இவரது ஜோடியான ஷார்ட் 42 பந்துகளில் 46 ரன் எடுத்தார். இதில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். இப்போட்டியில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது.

ஆரன் பின்ச் 172 ரன்கள் எடுத்தது உலக சாதனையாக உருவாகியுள்ளது. இதற்கு முன்பு இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 156 ரன்களை எடுத்து பின்ச் உலக சாதனை படைத்துள்ளார். இவற்றில் 11 பவுண்டரிகள், 14 சிக்சர்கள் அடங்கும். தனது சொந்த சாதனையை அவரே இன்று முறியடித்தார்.

இதே போல் பின்ச் மற்றும் ஷார்ட் ஜோடி 200 ரன்களை எடுத்தது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாகும். இது உலக சாதனையாகியுள்ளது.