புதுச்சேரி தனியார் ஷாப்பிங் மாலில் ஷொமட்டோ ஊழியர் விரட்டப்படும் வீடியோ, நெட்டிசன்கள் கொதிப்பு

புதுச்சேரி தனியார் ஷாப்பிங் மாலில் ஷொமட்டோ ஊழியர் ஒருவரை ஆடையை காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விரட்டப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது… இதற்கு  நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஷொமட்டோ ஊழியருடன் வாக்கும்வாதம் செய்யும் மால் நிர்வாகி

புதுச்சேரியில் உள்ள தனியால் ஷாப்பிங் மாலில், ஆடையை காரணம் காட்டி, தனியார் நிறுவனத் தின் உணவு டெலிவரி வழங்கும் ஊழியரை கட்டாயப்படுத்தி வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அந்தோணியார் கோவில் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள உணவகம் ஒன்றில், ஷொமட்டோ நிறுவன ஊழியர் ஒருவர், தனது சீருடை யுடன்  உணவு எடுக்க சென்றுள்ளார். ஆனால், அவரை உள்ளே விட வணிக வளாகத்தின் மேற்பாவையாளர் மறுப்பு தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  தான் ஏன் உள்ளே செல்லக்கூடாது என்று ஷொமட்டோ ஊழியர் வாக்குவாதம் செய்கிறார்… அதற்குள் வணிக வளாகத்தில் உள்ள மற்றொரு ஊழியர் விரைந்து வந்து,  அதற்கு , இது தனியாருக்கு சொந்தமான இடம்… இங்கு உணவு டெலிவரி செய்பவர்களுக்கு இடமில்லை என்று வாக்குவாதம் செய்கிறார்..  தொடர்ந்து இருக்கும் இடையே  வாக்குவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஷொமட்டோ ஊழியர் தானும் பட்டதாரி இளைஞர்தான் என்று வாதம் செய் கிறார்… ஆனாலும் அவரை அனுமதி மறுத்த மால் ஊழியர்கள்  அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியேற்றுகின்றனர்…

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் மால் நிர்வாகிககளின் மிருகத்தனமான செயலுக்கு  நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பலர் பட்டதாரி இளைஞரை இழிவுபடுத்திய மால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed