மனிதர்களை போன்று அழும் புதிய வகைப் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மையற்ற இந்த வகை பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர் துளிகள் இருப்பதை விலங்கியலாளர் கண்டறிந்துள்ளார்.

Hebius

அருணாச்சலப்பிரதேசத்தின் லேபா-ராடா மாவட்டத்தில் புதிய வகை பாம்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கீல்பேக் (ஆபத்தற்ற நீர்நிலைகளில் வசிக்கக்கூடிய)வகையை சேர்ந்த இந்த பாம்பு ஹைபியஸ் லேக்ரிமா என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

இதனை குவாஹத்தியை சேர்ந்த விலங்கியலாளரான ஜெயதித்யா புர்காயஸ்தா கண்டறிந்துள்ளார். இது குறித்து ஜெயதித்யா கூறும்போது, ” இந்த வகை பாம்பின் கருவிழிகளின் கீழே கருப்பு நிறத்தில் கண்ணீர் துளிகள் உருண்டு வருகின்றன. அதன் வழியே வெள்ளை கோடுகள் மேல்தாடையில் இருந்து தலையின் பின்புறம்ம் விரிந்து செல்கின்றன. இதனால் இந்த பாம்பிற்கு ‘அழும்’ பாம்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் லேக்ரிமா என்றால் கண்ணீர் என்று அர்த்தம். அதன்படியே இந்த பாம்பு லேக்ரிமா என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

48.7 செ.மீ. நீளம் கொண்ட இந்தப் பாம்பை, பாசர் நகரத்தை ஒட்டிய வயல்வெளிகளில் இருந்து கண்டுபிடித்தேன். இதை ஹெபியஸ் பிரிவில் உள்ள 44 வகைப் பாம்புகளோடு ஒப்பிட்டோம். ஆனால் மற்றவகைப் பாம்புகளில் இருந்து இது பல்வேறு வகைகளில் மாறுபட்டிருந்தது தெரியவந்தது.

உடல் தடிமன், நீளம், உடல் முழுவதும் குறுக்காக உள்ள கோடுகள், ஒழுங்கற்ற அடர் தழும்புகள் உள்ளிட்ட பண்புகள் மற்ற பாம்புகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகின்றன. இந்த அழும் பாம்பு சிறீய மீன்கள், தலைப்பிரட்டைகள், தவளைகளை உண்டு வாழ்கிறது” என கூறினார்.