தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்

சென்னை:
மிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென  மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பணி இடத்துக்கு தமிழக பேரிடர் மேலாண்மைதுறைஇயக்குனரும், சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
டாக்டர் பீலா ராஜேஷ் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக  நியமிக்கப்பட்டு உள்ளார்.
சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றி வந்த பீலா ராஜேஷ் திடீரென மாற்றப்பட்டுள்ளது சுகாதாரத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா விஷயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருக்கும், பீலா ராஜேஷ்க்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தந்தி டிவிக்கு பீலா ராஜேஷ் பிரத்யே பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு உள்ளார்.