கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலகெங்கும் இதுவரை 20606 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

நேற்று வரை சீனாவில் 361 பேர் உயிரிழந்த நிலையில்,  இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர், இதுவரை சீனாவில் மட்டும் மொத்தம் 425 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியிருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பல்வேறு பாதிப்புகள்

 

சீனாவிலிருந்து வெளியேற்றியிருக்கும் ஆஸ்திரேலிய குடிமக்களை, ஆஸ்திரேலியா அரசு இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தி தனி தீவில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிகுறிகள் தென்பட இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா அரசு செயல்படுத்தியுள்ளது.

 

 

சீனாவுக்கு வெளியே பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் இந்த நோய்க்கு பலியான நிலையில். தற்பொழுது, ஹாங்காங்கில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதன்மூலம், இதுவரை 427 பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு உயிரிழந்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால், சீன வர்த்தகம் பெருமளவு பாதித்தநிலையில், இந்திய வைர சந்தையையும் இது வெகுவாக பாதித்துள்ளது.  வைரம் பட்டை தீட்டும் தொழில் பெருமளவில் சீனாவில் நடைபெறுவதே இதற்கு காரணம்.