‘Man vs Wild’ புகழ் பியர் கிரில்ஸுடன் மோடியைத் தொடர்ந்து ரஜினி: பந்திபுர் புலிகள் சரணாலயத்தில் படப்பிடிப்பு

பெங்களூரு:

மிழத்தில் பெரியார் குறித்து பேசி சர்ச்சையை கொளுத்திப்போட்ட ரஜினி, தற்போது  டிஸ்கவரி சேனலில் பிரபல நெறியாளர் பியர் கிரில்ஸுடன் ஆவணப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பிரதமர் மோடி நடித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது நடிகர் ரஜினி நடித்து வருகிறார்.

கர்நாடக மாநிலத்தில் பந்திபுர் புலிகள் சரணாலயத்தில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சென்றுள்ள ரஜினிகாந்த்,  பியர் கிரில்ஸுடன் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.  இந்த ஆவணப்படத்தை மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த தயாரிப்பு தயாரிக்கிறது.

டிஸ்கவரி சேனலில் ஒளிப்பரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ். இந்த  நிகழ்ச்சி உலகம் முழுவதும் பிரபலமானதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் பெரும் புகழ் பெற்றவர். பிரிட்டனை சேர்ந்த பியர் கிரில்ஸ் ஒரு முன்னாள் ராணுவ வீரர். பிரிட்டன் ராணுவத்தின் சிறப்பு அதிரடி படையில் விமானப் பிரிவில் பணியாற்றிவர். ஆனால் இவருக்கு எழுத்தாளர், தொலைக்காட்சி நெறியாளர் என்று பல முகங்கள் உண்டு.

சாகசப்பயணங்களுக்கு சொந்தக்காரரான இவர், மலைப்பிரதேசம், காடுகள், வனவிலங்குகள் என அனைத்தையும் அசால்டாக கடந்து, அங்கு கிடைக்கும் உணவுகளையும், மாமிசங்களையும் சாப்பிட்டு, தனது சாகசப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

பியர் கிரில்ஸ்-ன் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, அவருடன் இணைந்து காடுகளில் பயணம் செய்த ஆவணப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது ஆன்மிக அரசியல் செய்யப்போவதாக தெரிவித்துள்ள 70வயது  ரஜினிகாந்த், பியர் கிரில்ஸுடன் இணைந்த கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் சரணாலயத்தில் ஆவணப்படத்தில் நடித்து வருகிறார்.. இந்த ஆவணப்படத்தை முப்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

பந்திபுர் வனவிலங்கு சரணாலயம் செல்லும் ரஜினி – வீடியோ….கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 

https://youtu.be/ImGH1WEozrk