#ShameOnBMC: கங்கனா ரனாத்தின் வீட்டை இடிக்கும் மும்பை மாநகராட்சி… வீடியோ – டிரெண்டிங்

மும்பை:

#ShameOnBMC என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளமான டிவிட்டில் டிரெண்டிங்காகி வருகிறது.  இந்த நிலையில்,  கங்கனா ரனாத்தின் வீட்டை  மும்பை மாநகராட்சி இடிக்கும் வீடியோவும்  சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகையான கங்கனா ரானாத், தமிழில் தாம்தூம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர், பாலிவுட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் பெருகிவிட்டதாக கருத்து தெரிவித்தார். மேலும் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்தும் அவர் தொடர்ந்து பல சர்ச்சை கருத்தைக்களை கூறி வந்தார். மேலும் நடிகை ரியா சக்கரபோர்த்திதான் சுஷாந்துக்கு போதைப்பொருளை அறிமுகம் செய்து வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஏற்கனவே நடிகர் ரித்திக்ரோஷன் தன்னை ஏமாற்றி விட்டதாக, புகார் தெரிவித்த கங்கனா ரானாத், தற்போது இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதில் உத்தவ் தாக்கரே மகனின் பெயரும் அடிப்பட்டது.

இந்த நிலையில் கங்கனாவுக்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மணாலியில் உள்ள கங்கனா ரனாவத் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது.

நான் மும்பையில் இருந்து மாணாலிக்கு வந்துள்ளதால் இந்த வீட்டை குறி வைத்து சுட்டுள்ளனர். இதற்க்கு நானே சாட்சி. சத்தம் கேட்டதும் பாதுகாவலர் வீட்டை சுற்றி நோட்டமிட்டதில் யாரும் இல்லை. எனவே உள்ளூரில் உள்ளவர்களை வைத்து தன்னை பயமுறுத்த வேண்டும் என்பதால், பணம் கொடுத்து இப்படி செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சிவசேனா மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதற்கு சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில்,  கங்கனா ரணாவத் மும்பைக்கு வரக்கூடாது எனவும் அவ்வாறு வந்தால் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

ஆனால், தான் மும்பை வருவேன் முடிந்ததை செய்து பாருங்கள் என சவால் விட்டார். மேலும், தனது உயிருக்கு அச்சுறுத்தல்உள்ளதாக மத்தியஅரசிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

ஓய்  பிரிவு பாதுகாப்புடன் ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து நடிகை கங்கனா மும்பைக்கு செல்ல உள்ளார்.

இதற்கிடையில், மும்பை பாந்தியா பகுதியில் உள்ள கங்கனா ரானத்தின் பங்களா விதிமுறைகளி மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்க விட்டால், வீட்டை இடிப்போம் என்று மும்பை மாநகராட்சி ஆள் இல்லாத வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது.

இந்த நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று மும்பை மாநகராட்சி கங்கனா ரனாத்தின் வீட்டை இடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. காம்பவுண்டு சுவரை பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

படிக்கட்டுக்கு கீழே கழிவறை கட்டியுள்ளார்… கங்கனாவுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்

இது சமூக ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 24 மணி நேரத்திற்குள் ஒருவரின் வீட்டை இடிக்கும் மகாராஷ்டிரா மாநில சிவசேனா அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெட்கங்கெட்ட மும்பை மாநகராட்சி, மும்பை மாநகராட்சியின் நடவடிக்கை வெடக்க்கேடாது) என்பதை குறிக்கும் வகையில்,  #ShameOnBMC  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்காகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாநில அரசின் பகிரங்கமான மிரட்டல் இது என சமூக ஆர்வலர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கங்கனா ரானாத்தின்மீது கடந்த 2016ம் ஆண்டு கூறப்பட்ட போதை மருந்து பிரச்சினையை தற்போது கையில் எடுத்துள்ள தாக்கரே அரசு, காவல்துறையினர் மூலம் கங்கனா ரணாவத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளதாக மாநில அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கங்கனா, தாம் போதை மருந்து பயன்படுத்துவோருடன் தொடர்பில் இருந்ததை கண்டறிந்தால், தவறை ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வீடியோ: நன்றி ஏஎன்ஐ