எங்களை பற்றி

[tdc_zone type=”tdc_content”][vc_row][vc_column][td_block_text_with_title]

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம்…

உலகில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி இன்று ஊடகத்துறையினையும் முழுமையாக ஆக்கிரமித்து உள்ளது.
மனித வாழ்க்கையில் மகத்தான புரட்சி ஏற்படுத்திய இணைய இணைப்பு இன்று பட்டிதொட்டிகளிலும் பரவி இன்றைய இளைய சமுதாயத்தினரின் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது.
இணையத்தின் உதவியால் இன்று உலகமே சுட்டுவிரலில் அடங்கி உள்ளது. அப்படியொரு மகத்தான மக்கள் பணியில் கடந்த 6ஆண்டுகளாக உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
விஞ்ஞான வளர்ச்சியின் பயனை செம்மையாக பயன்படுத்தி உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் விருப்பு வெறுப்பின்றியும், வணிக நோக்கமின்றியும் உலக மக்களுக்கும், குறிப்பாக தமிழ் மக்களுக்கும் சேவையாற்றி வருகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், உலகம் முழுவதும் உள்ள தமிழ்மக்கள் உள்பட அனைத்து தரப்பு இணையவாசிகளின் விருப்பை நிறைவேற்றும் வகையில், தமிழகம், இந்தியா, உலகம், விளையாட்டு, திரையுலகம் , பிரபலங்களின் பிரத்யே பேட்டிகள், சிறப்புச்செய்திகள், அரசியல் கட்டுரைகள், உள்பட அனைத்துவிதமான செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது.
இன்றைய சூழலில் அனைத்து பிரபல தமிழ் நாளிதழ்கள், தமிழ் வார இதழ்கள் அனைத்தும் இணைய முகவரியைப் பெற்றுள்ளன. அவைகளுக்கு போட்டியாக களப்பணியாற்றியாற்றி வருகிறது பத்திரிகை டாட் காம்.

கடந்த பத்தாண்டுகளில் இணையத்தின் பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளிலேயே ஆசிய நாடுகள்தான் அதிகமாக பயன்படுத்துவதாகவும், . இணையத்தில் உலா வருபவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வளைத்தளங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களான பேஃஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்றவற்றில் உலகம் முழுவதும் சுமார் 150 கோடிக்கும் மேலோனார் மூழ்கி கிடப்பதாகவும், இவை தற்போதைய லாக்டவுன் காலத்தில் பல மடங்கு உயர்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதே இணையதளத்தை முன்னிறுத்தியே உங்கள் பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 29ந்தேதி தொடங்கப்பட்டது . உடனுக்குடன் செய்திகளை அதற்குரிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் வெளியிட்டு உலக தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் 6வது ஆண்டாக வெற்றிநடை போட்டு வருகிறது.

[/td_block_text_with_title][/vc_column][/vc_row][/tdc_zone]

Leave a Reply