impact

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. “”இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்.”” – பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் …..

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2 உலக அரசியலில் முகநூல் தலையீட்டால் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்த செய்திக் கட்டுரையின் இரண்டாம்  பகுதி முகநூல் மேடையில் உள்ள பல…

ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்: ”நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,” என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார். சத்தீஸ்கரில், முதல்வர்…

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள்…

கொரோனா தாக்கத்தால் செலவைக் குறைத்துள்ள 78% இந்தியர்கள்

டில்லி கொரோனா தாக்கம் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களில் 78% பேர் தங்கள் செலவைக் குறைத்துள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. கொரோனா…

கொரோனா பாதிப்பு: கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து: மகாராஷ்டிரா அரசு உத்தரவு

மும்பை: மகாாரஷ்டிராவில் இந்த ஆண்டு கல்லூரி இறுதித் தேர்வுகள் நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டம் வழங்க பரிந்துரைத்துள்ளதாக அம்மாநில முதல்வர் உத்தவ்…

கொரோனா எதிரொலி: சிறப்பு தனிமைப்படுத்தல் விடுமுறையை அறிவித்தது ஏர் இந்தியா

புதுடெல்லி: இந்திய விமான சேவை ஒரு புதுவித முயற்சி எடுத்துள்ளது. இது போன்ற ஒரு முயற்சியை இந்திய விமான சேவை…

கொரோனா பாதிப்பு :  மருத்துவ நிபுணர்களுடன் ராகுல் காந்தி இன்று பேச்சு

டில்லி கொரோனா பாதிப்பு தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி…

கொரோனா எதிரொலி : புதிய மோசமான கடன் சுழற்சி துவக்கம்…

புதுடெல்லி: கொரோனா எதிரொலியாக புதிய மோசமான கடன் சுழற்சி துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான கடன்கள் என்பது 5 ஆண்டுகளுக்கு…

மதுபானத்துக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா கட்டணம் – டெல்லி அரசு அதிரடி

புதுடெல்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாடு…

கொரோனா வைரஸ் பாதிப்பு: தயாரிப்பு பணிகளை நிறுத்திய கார் தயாரிப்பு நிறுவனங்கள்

புது டெல்லி: ஹூண்டாய் மோட்டார் மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (டி.கே.எம்) ஆகியவை கொரோனா வைரஸ் பரவுவதை அடுத்து, அந்தந்த…