நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெறும் வகையில், நவம்பர் 30ஆம் தேதி மக்களவையையும், டிசம்பர் 2ஆம் தேதி மாநிலங்களவையையும் மீண்டும் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரு அவைகளின் தலைவர்களுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

 

அலுவல் பணிகளைப் பொறுத்து, இரு அவைகளின் கூட்டத்தொடரும் டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், கூட்டத்தொடரை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்வதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இதுவரை பெறப்படவில்லை.